ஜெயமோகன் எழுதியவை உண்மைக்குப் புறம்பானவை!: அசோகமித்திரன் மகன் ராமகிருஷ்ணன் 

ஜெயமோகன் – அசோகமித்திரன்

றைந்த எழுத்தாளர் அசோகமித்திரன் குறித்து ஜெயமோகன் குறிப்பிட்டவை உண்மைக்கு மாறானவை என்று அசோகமித்திரனின் மகன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு பலரும் புகழஞ்சலி செலுத்தினர். எழுத்தாளர் ஜெயமோகன், அசோகமித்திரன் பற்றி குறிப்பிடு்ம்போது, அவர் மிகுந்த வறுமையில் உழன்றதாகவும், பெண் எழுத்தாளர் ஒருவரிடம் கார் ஓட்டுநராகவும், சாவி இதழில் அலுவலக உதவியாளராகவும் பணியாற்றினார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ராமகிருஷ்ணன்

அசோகமித்திரனை நன்கு அறிந்த பலர், ஜெயமோகன் தெரிவித்தவை பொய் என கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் அசோகமித்திரன் மகன் ராமகிருஷ்ணன், தனது தந்தை ஒரு போதும் கார் ஓட்டுநராக பணியாற்றியதில்லை என்றும் அவருக்கு கார் ஓட்டத் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் எந்த அலுவலகத்திலும் உதவியாளராக பணியாற்றியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.