இரட்டைக் குழல் துப்பாக்கியில் குண்டு உள்ளதா : கிண்டல் செய்யும் திவாகரன் மகன்

சென்னை

சிகலாவின் உறவினர் திவாகரன் மகன் ஜெயானந்த் முதல்வர் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்ஸை தனது முகநூல் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றது அவருடைய உறவினர்களை மிகவும் மகிழ்வில் ஆழ்த்தி உள்ளது.    ஜெயலலிதா வீடியோ வெளியிட்டதற்காக இளவரசி குடுமபத்தின் கிருஷ்ணப் பிரியாவும் விவேக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.   ஆயினும் திவாகரன் மகன் ஜெயானந்த் தினகரனுக்கு ஆதரவாக தனது கருத்துக்களை கூறி வந்தார்.

தினகரனின் வெற்றிக்குப் பின் உறவினர்கள் அனைவருமே அவர் பக்கம் வந்து விட்டனர்.   தற்போது திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் தனது முக நூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில்,  எடப்பாடி மற்றும் பன்னீர் செல்வம் புகைப்படங்கள் உள்ளன.   அதற்குக் கீழே ‘இரட்டைக் குழல் துப்பாக்கி போல் செயல் படுவோம் – எடப்பாடி பழனிச்சாமி’  எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.   அதற்குக் கிழே தனது படத்தையும் தினகரன் படத்தையும் போட்டு ”இரட்டைக் குழல் துப்பாக்கி வைத்திருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.  அதில் குண்டு இருக்கின்றதா?  இல்லையா?”  என எழுதி உள்ளார்.

இந்தப் பதிவு தினகரன் ஆதரவாளர்களிடையே வைரலாகி வருகிறது.