தமிழில் அறிமுகமாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்

தமிழ், இந்தி என கொடிக்கட்டி பறந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் முதல் திரைப்படம் வெளியாகும் முன்பே ஸ்ரீ தேவை மரணமடைந்தார். இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தயாராகும் பை-லிங்குவல் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

janvi

சமீபத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி, பாலிவுட்டில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இதே படத்தில் நடிகர் ஷாகித் கபூரின் சகோதரர் ஈஷான் கட்டூர் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார். பிரபல இந்தி சினிமா இயக்குநர் கரண் ஜோகர் ‘தடக்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ரன்வீர் சிங், விக்கி கௌஷால், கரீனா கபூர், பூமி பட்நேகர், அணில் கபூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இதனிடையே, தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஜான்வி கபூர் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது. 2 தமிழ் படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்க ஜான்வியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதில் ஒரு படத்தில் அர்ஜுன் ரெட்டி சென்சேஷன் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்ட்டூன் கேலரி