தமிழில் நயன்தாரா நடித்த வேடத்தில் ஸ்ரீதேவி மகள் !

 

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் யோகிபாபு நடித்தார். நல்ல விமர்சனத்தையும் வசூலையும் இந்த படம் சம்பாதித்து கொடுத்தது.

இந்த படத்தை இந்தியில் தயாரிக்கும் உரிமையை பெற்றுள்ளார், இந்தி இயக்குநர், ஆனந்த் எல்.ராய்.

தனுஷ், அக்‌ஷய் குமார், சாரா அலி கான் உள்ளிட்டோர் இப்போது நடித்து வரும் ‘அட்ராங்கி ரே’ படத்தை ஆனந்த் இயக்கி வருகிறார். இந்தி கோலமாவு கோகிலாவை ஆனந்த் தயாரிக்க சித்தார்த் சென்குப்தா டைரக்ட் செய்கிறார்.

நயன்தாரா தமிழில் நடித்த வேடத்தில் இந்தியில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியில் ‘தடக்’ என்ற படம் மூலம் நடிகையாக அடி எடுத்து வைத்துள்ள ஜான்வி கைவசம் இப்போது ‘தோஸ்தனா- 2’ உள்ளிட்ட மூன்று படங்கள் உள்ளன.

இந்தி கோகிலாவின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி பஞ்சாபில் ஆரம்பமாகிறது. ஒரே ‘ஷெட்யூலில்’ படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

– பா. பாரதி