ஜார்கண்ட்: வறுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை

ராஞ்சி:

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே உள்ள அர்சாண்டே கிராமத்தில் வாழ்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தூக்கில் பிணமாக தொங்கினர்.

2 குழந்தைகள் உட்பட 7 பேர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர.

வறுமையில் வாடிய இந்த குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.