ஜார்க்கண்ட் துறைமுகம் மற்றும் விமான நிலையத்துக்கு வாஜ்பாய் பெயர்: மாநில பாஜ அரசு

ராஞ்சி:

றைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் ஜார்கண்ட் மாநிலத்திலும் முக்கிய நகரங்களுக்கு சூட்டப்பட்டு வருகிறது. மாநிலத்தின் துறைமுகம் மற்றும் விமான நிலையம், மருத்துவக்கல்லூரி போன்றவற்றுக்கு வாஜ்பாய் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சத்தீஸ்கர் மாநில தலைநகர்  ராய்ப்பூரின் பெயரை அடல் நகர் என பெயர் மாற்றம் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து தற்போது ஜார்க்கண்ட் மாநிலமும் வாஜ்பாய் நினைவாக முக்கிய நகரங்களின் பெயர்களை மாற்ற முடிவு செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் தலைநகர் டில்லியில் உள்ள ஸ்மிருதி ஸ்தல் பகுதியில் தகனம் செய்யப்பட்டது. அவரது, அஸ்தி நாடு முழுவதும் உள்ள முக்கிய நதிகளில் கரைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வாஜ்பாயை கவுரவிக்கும் வகையில் பாஜக ஆளும் மாநில அரசுகள் அவரது பெயரை சூட்டி பெருமைப்படுத்தி வருகின்றன.  கடந்த சிலநாட்களுக்கு முன்பு  முன் சத்தீஸ்கர் மாநிலத்தில் தலைநகர் பெயரை அடல்நகர் என்று மாற்றப்படுவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்திலும் சில நகரங்களுக்கு வாஜ்பாயின் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள  சாஹிப்கஞ் துறைமுகத்திற்கு அடல் பிஹாரி வாஜ்பாய் துறைமுகம் என மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல, அம்மாநிலத்தின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கு கீழ் இயங்கும் மருத்துவக் கல்லூரி பலமு, ஜம்ஸத்பூர் கல்லூரி, ராஞ்சி மாநாட்டு மையம், ஜார்கண்ட் ஆராய்ச்சி மையம் போன்றவற்றும் வாஜ்பாய் பெயர் சூட்ட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஜார்கண்டில் உள்ள  தியோகர் விமான நிலையத்திற்கு  வாஜ்பாய் பெயரை வைக்க அம்மாநிலம் சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  மேலும் உலக வங்கியுடன் இணைந்து சுமார் 413 கோடி செலவில் போடப்பட்ட ககோ 8 வழிச்சாலைக்கு வாஜ்பாய் பாத் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.