சிறப்பான ஊதியம், சலுகைகள்..! லடாக் சாலை திட்ட பணிகளுக்கு தொழிலாளர்களை அனுப்ப ஜார்க்கண்ட் அனுமதி

டெல்லி: லடாக் எல்லையில் சாலை திட்டங்களை மேற்கொள்ளும் வகையில், தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த ஜார்கண்ட் அரசு அனுமதி தந்திருக்கிறது.

ஜார்க்கண்டில் இருந்து லடாக் வரை புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச்செல்ல ரயில்களை கோரி கடந்த மாதம் உள்துறை அமைச்சகம் ரயில்வேக்கு கடிதம் எழுதியது. உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து, ஜார்கண்ட் அரசாங்கம் ஒப்பந்தக்காரர்களை விலக்குமாறு எல்லை சாலைகள் அமைப்புக்கு கடிதம் எழுதியது.

உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை தொடர்ந்து, ஜார்கண்ட் அரசானது ஒப்பந்தக்காரர்களை விலக்குமாறு எல்லைகள் சாலை அமைப்பிடம் கேட்டுக் கொண்டது. அதற்கு பதிலாக, நேரடியாக மாநிலத்திலிருந்து தொழிலாளர்களை நியமிக்கிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பாக மாநிலத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஜார்கண்ட் அரசு எல்லைகள் சாலை அமைப்பை கேட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜூன் 10, 2020 அன்று கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லடாக்கில் சாலை திட்டங்களுக்கான தொழிலாளர்களை பணியமர்த்த ஜூன் 9ம் தேதி 60 பேர் கொண்ட குழு வர உள்ளது.

You may have missed