ராஞ்சி:

ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் ஏற்கனவே 2 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், ராகுல்காந்தி இன்று 2 பொதுக்கூட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

81 தொகுதிகளைக்கொண்ட ஜார்கண்ட் சட்டமன்றத்துக்கு  5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. . அதன்படி, முதல்கட்ட தேர்தல் நவம்பர் 30ந்தேதி நடைபெற்றது. 2வது கட்ட தேர்தல் டிசம்பர் 7ந்தேதி நடைபெற்றது.

3வது கட்ட தேர்தல் டிசம்பர் 12ந்தேதியும்,  4வது கட்ட தேர்தல் டிசம்பர் 16ந்தேதியும், 5வது கட்ட தேர்தல் டிசம்பர் 20ந்தேதியும் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை டிசம்பர் – 23ந்தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், மூன்றாம் கட்டத் தேர்தல் பிரசாரம் தற்போது, களை கட்டி உள்ளது. ஜார்க்கண் டில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகினற்னர்.

இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து,  முன்னாள் காங்கிரஸ் தலைவரும், வயநாடு எம்.பியுமான  ராகுல்காந்தி இன்று பிரசாரம் செய்கிறார்.

அங்குள்ள ஹசாரிபாக் தொகுதியின் பர்காகாவில் பகல் 12 மணி அளவிலும்,  மதியம் 2 மணிக்கு ராஞ்சியிலும்  ராகுல்காந்தி தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.

மூன்றாம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நாளை முடிவடைகிறது. இதில் 17 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 12 ஆம் தேதியன்று நடைபெறுகிறது.