ஜார்கண்ட் முதல்வர் சோரன், அவரது மனைவிக்கு கொரோனா நெகடிவ்…

ராஞ்சி:
ஜார்கண்ட் முதல்வர் ஹேமர்ந் சோரன் ஏற்கனவே கொரோனா அறிகுறி காரணமாக தனிமைப் படுத்திக்கொண்டுள்ள நிலையில், அவருக்கும்,  அவரது மனைவிக்கும் நடத்தப்பட்ட  கொரோனா  பரிசோதனையின் முடிவு, தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில்  காங்கிரஸ் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் முதல்வராக  ஆட்சி செய்து வருகிறார். சமீபத்தில், அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட  அமைச்சர் மிதிலேஷ் தாகூருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவிக்கு கொரோனா தொற்று இல்லையென முடிவுகள் வந்தது.

இந்த நிலையில், அமைச்சருடன் தொடர்பில் இருந்த முதல்வர் ஹேமந்த் சோரன்  வீட்டில் சுயமாக தனிமைப்படுத்தி கொண்டார். இதையடுத்து அவருக்கும், அவரது மனைவி கல்பனா சோரனுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  

இந்த சோதனையின் முடிவு இன்று வெளியானது. அதில் இருவருக்கும் கொரோனா நெகடிவ் என முடிவு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், முதல்வரின் அலுவலக ஆலோசகர் அபிஷேக் பிரசாத் மற்றும் மூத்த அவசர செயலாளர் சுனில் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட சி.எம்.ஓ.வில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் மாதிரிகளும் பரிசோதனைக்கு சேகரிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி