டில்லி,

நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் மதுகோடாவுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடா  உள்ளிட்டோர்  குற்றவாளிகள் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜார்கண்ன் மாநில முதல்வராக மதுகோடா இருந்தபோது, முறைகேடாக தனியார் நிறுவனங்களுக்கு  நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து  சிபிஐ வழக்கு தொடர்ந்தது.

இதில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராஷர் கடந்த புதன்கிழமை பரபரப்பு  தீர்ப்பு வழங்கினார்.

அதில், “ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா ஆகியோர் மீதான ஊழல் புகாருக்கு ஆதாரம் உள்ளது. எனவே இந்த வழக்கில் அவர்கள் குற்றவாளிகள் என்று கூறியிருந்தார். தீர்ப்பு விவரம் இன்று (சனிக்கிழமை) அறிவிக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில்,  ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டைனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், ரூ.25 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.