ராஞ்சி: ஜார்கண்டில் ஏப்ரல் 22 முதல் 29 வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருவதையடுத்து, மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. இதையடுத்து ஜார்கண்ட் மாநிலத்திலும் ஏப்ரல் 22ம் தேதி முதல் 29 வரை ஊரடங்கு விதித்து மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில அரசு தெரிவித்துள்ளதாவது: மாநிலம் முழுவதும் ஏப்ரல் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது. அத்தியாவசிய சேவைகள், சுரங்க, விவசாய மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

வழிபாட்டு தலங்கள் திறந்த நிலையில் இருக்கும், ஆனால் பக்தர்கள் கூட்டமாக வருவதற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.