ஜாமின் நீட்டிக்க மறுப்பு: 30ந்தேதி லாலு சரணடைய ராஞ்சி நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ராஞ்சி:

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்  உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சைக்காக அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வரும் அவரது ஜாமின் காலம் முடிவடைய உள்ள நிலையில், அவரது  ஜாமினை நீட்டிக்க மறுத்த ராஞ்சி நீதி மன்றம் வரும் 30ந்திக்குள் லாலு பிரசாத் யாதவ் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.

பீகார் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சரும்,  ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தனது ஆட்சி காலத்தில் மாட்டுத் தீவனம் வாங்கியதில் பல கோடி ஊழல் செய்ததாக பல வழக்குகள்  தொடரப்பட்ட வழக்கில் 5 வழக்குகளில் அவர்மீதான குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து ஜெயிலில் அடைக்கப்பட்ட லாலுவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும், அவரது மகன் திருமணத்திற்காகவும் ஜாமினில் வெளியே வந்தார். தற்போது அவர் தனது மருத்துவ சிகிச்சை தொடர்பாக மேலும் 3 மாதம் ஜாமினை நீட்டிக்க கோரி ராஞ்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, லாலு பிரசாத்துக்கு மேலும் ஜாமின் நீட்டிப்பு வழங்க முடியாது என்று ம், வரும 30-ந்தேதி அவர் கோர்ட்டில் சரண் அடைய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதற்கிடையில்,  உடல் நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள ஏசியன் ஹைர்ட் மருத்துவமனையில் கடந்த 21ந்தேதி லாலு பிரசாத் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிஸ்டியுலா அறுவை சிகிசைச் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.