லாலுவுக்கு மேலும் ஆறு வாரம் ஜாமின் நீட்டிப்பு: ஜார்கண்ட் உயர்நீதிமன்றம்

ராஞ்சி:

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் பீகார் மாநில முதல்வருமான லாலுபிரசாத் யாதவ் உடல்நிலையை கருதி, சிகிச்சை பெறும் வகையில ராஞ்சி உயர்நீதி மன்றம் அவருக்கு 6 வாரம் ஜாமின் வழங்கி இருந்தது.

இந்த நிலையில், மேலும் 6 வாரம் ஜாமினை நீட்டித்து ராஞ்சி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மாட்டுத்தீவன வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு, உடல்நலக் குறைவு காரணமாக ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக  டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட லாலுவை, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்ததை தொடர்ந்து, அவரை மீண்டும் ராஞ்சி மருத்துவமனைகே மத்திய அரசு திருப்பி அனுப்பியது.

இந்த நிலையில், உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் கேட்டு லாலு ராஞ்சி நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது அவருக்கு நிபந்தனைகளுடன்   6 வார காலம் ஜாமின் வழங்கி ஜார்கண்ட் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், தனது உடல்நிலையை காரணம் காட்டி,  ஜாமினை மேலும் சில காலம் நீட்டிக்க கோரி லாலு தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட ராஞ்சி உயர்நீதி மன்றம், லாலுவுக்கு மேலும் 6 வார காலம் ஜாமின் வழங்கி உள்ளது.