பாட்னா:

மாட்டுத்தீவன வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு, உடல்நலக்குறைவு காரணமாக ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், லாலுவின்  உடல்நிலையை கருத்தில் கொண்டு 6 வார காலம் ஜாமின் வழங்கி ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

லாலு, தனது மகன் திருமணத்தில் கலநதுகொள்ள ராஞ்சி கோர்ட்டு 5 நாட்கள் பரோல் வழங்கிய நிலையில் ஜார்கண்ட் மாநில உயர்நீதி மன்றம் லாலுவுக்கு 6 வார காலம் ஜாமின் வழங்கி உள்ளது.

மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் திருமணத்தில் பங்கேற்பதற்காக, ராஞ்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலுவுக்கு, கடும் நிபந்தனைகளுடன் மூன்று நாள் பரோல் வழங்கப்பட்டிருந்தது.

லாலுவின் உடல் நிலை மோசமாக இருப்பதாக கூறி, அவருக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவரது தரப்பில் ஜார்கண்ட் உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ராஞ்சி உயர்நீதிமன்றம் லாலுவுக்கு 6 வாரங்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

லாலுவின் மூத்த மகனான தேஜ் பிரதாப் யாதவின் திருமணம் சனிக்கிழமை பாட்னாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.