இப்போது தான் 11 ஆம் வகுப்பில் சேர்ந்த ஜார்க்கண்ட் மனித வளத் துறை அமைச்சர்

ராஞ்சி

ல்வித் துறையை கவனித்து வரும் ஜார்க்கண்ட் மாநில மனித வளத்துறை அமைச்சர் ஜகமத் மாதோ தற்போது தான் 11 ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மனித வளத் துறை அமைச்சகம் கல்வித் துறையையும் கவனித்து வருகிறது.   நீட் தேர்வு உள்ளிட்ட பல நுழைவுத் தேர்வுகள் மத்திய மனித வளத் துறை அமைச்சகம் மூலம் நடத்தப்படுவது நாம் அறிந்ததே.

ஒவ்வொரு மாநிலத்திலும் இது போன்ற துறைகளில் அது குறித்து நன்கு கல்வி கற்றோரை அமைச்சர்களாக நியமிப்பது வழக்கமாகும்.  உதாரணமாக சுகாதாரத்துறை அமைச்சர்கள் பெரும்பாலும் மருத்துவ பட்டப்படிப்பு படித்தவர்களாகவும் ஒரு சிலர் பட்டமேற்படிப்பு படித்தவர்களாகவும் இருப்பதைக் கண்டுள்ளோம்.

ஆனால் ஜார்க்கண்ட் மாநில மனித வளத் துறை அமைச்சர் ஜகமத் மாதோ தாம் வெறும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் எனக் கூறி உள்ளார்.

அவர் சமீபத்தில், “ நான் 11 ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளேன்.  நன்கு படிக்க உத்தேசித்துள்ளேன். நான் வெறும் 10 ஆம் வகுப்பு மட்டும் படித்தவன் என்பதால் எனது பணியைப் பலரும் விமர்சித்ததால் துயரம் அடைந்து இந்த முடிவை எடுத்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.    இதற்கு பல நெட்டிசன்கள் இவ்வாறு படிப்பறிவு இல்லாத அமைச்சர்களால் இந்தியா ஆட்சி செய்யப்படுவதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.