எட்டாவது மாநிலமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிபிஐ விசாரணை பொது அனுமதி ரத்து

ராஞ்சி

இந்தியாவில் எட்டாவது மாநிலமாக ஜார்க்கண்ட் மாநிலம் சிபிஐ விசாரணை பொது அனுமதியை ரத்து செய்துள்ளது.

 சிபிஐ விசாரணையை மாநிலங்களில் நடத்த  பல மாநிலங்கள் பொது அனுமதி அளித்துள்ளன.

இந்த பொது அனுமதி மூலம் மாநில அரசுகளின் அனுமதி இன்றி சிபிஐ தனது விசாரணையை மாநிலங்களில் நடத்த முடியும்

தற்போது மாநிலங்கள் அந்த பொது அனுமதியை ரத்து செய்து வருகின்றன.

இதன் மூலம் சிபிஐ அம்மாநிலத்தில் விசாரணை செய்ய மாநில அரசுகளின் அனுமதியைப் பெற வேண்டி உள்ளது.

இதுவரை 7 மாநிலங்கள் அனுமதியை ரத்து செய்துள்ளன.

இன்று ஜார்க்கண்ட் மாநிலம் 8 ஆவது மாநிலமாக பொது அனுமதியை ரத்து செய்துள்ளது.