ஜார்க்கண்ட் சட்டசபைக்கு குதிரையில் வந்த இளம் வயது பெண் எம்.எல்.ஏ…!

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபைக்கு இளம் வயது பெண் எம்.எல்.ஏ ஒருவர் குதிரையில் வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனியின் சொந்த மாநிலம் ஜார்க்கண்ட். இந்த ஜார்க்கண்ட் சட்டசபைக்கு குதிரையில் வந்துள்ளார் இளம் வயது பெண் எம்எல்ஏவான அம்பா பிராசாத்.

கடந்த 2019ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பர்காவுன் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர். தற்போதுள்ள சட்டசபை உறுப்பினர்களில் மிகவும் இளைய வயதுடையவர் இவர்தான்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்தக் குதிரையை சர்வதேச மகளிர் தினத்தன்று ஓய்வு பெற்ற கர்னல் ரவி ரத்தோர் எனக்கு பரிசாக வழங்கியுள்ளார் என்று கூறினார்.