ராஞ்சி:

ஜாா்க்கண்ட் மாநித்தில் சட்டமன்ற தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இன்று  6 மாவட்டங் களில் உள்ள 13 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் இன்று  6 மாவட்டங்களில் உள்ள 13 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதற்காக 3,096 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்றைய முதற்கட்ட தேர்தலில் 18,01,356 பெண்கள் உட்பட 37,83,055 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவு இன்று  காலை 7 மணிக்கு தொடங்கி உள்ளது. வாக்குப்பதிவை யொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

2வது கட்ட தேர்தல் டிசம்பர் 7ந்தேதியும், 3வது கட்ட தேர்தல் டிசம்பர் 12ந்தேதியும்,  4வது கட்ட தேர்தல் டிசம்பர் 16ந்தேதியும், 5வது கட்ட தேர்தல் டிசம்பர் 20ந்தேதியும் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை டிசம்பர் – 23ந்தேதி நடைபெற உள்ளது.