துபாய்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், அதிரடி சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பேர்ஸ்டோ, 97 ரன்களில் ரவி பிஷ்னோய் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானது அவரின் ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய போட்டியில், டேவிட் வார்னருடன் துவக்க வீரராக களமிறங்கிய இங்கிலாந்தின் பேர்ஸ்டோ, துவக்கம் முதலே வெளுக்கத் துவங்கினார். வார்னர் சற்று நிதானமாக ஆடிவர, இவரோ வேறு லெவலில் ஆடினார்.
மொத்தம் 55 பந்துகளை சந்தித்த பேர்ஸ்டடோ, 6 சிக்ஸர்கள் & 7 பவுண்டரிகளுடன் 97 ரன்களை விளாசினார்.
வார்னர், திடீரென அவுட்டான நிலையில், இவர் எப்படியும் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 97 ரன்களில் அவுட்டானார்.