நகர்ப்புற நக்சல்கள் என பொய்த் தகவல் கூறும் நகர்ப்புற முட்டாள்கள் : ஜிக்னேஷ் மேவானி

கமதாபாத்

காராஷ்டிர அரசு 5 பேரை கைது செய்ததற்கு குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

பிரதமர் மோடியை கொல்ல சதி செய்ததாக எழுந்த புகாரை ஒட்டி மகாராஷ்டிராவில் இடது சாரி ஆர்வலர் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பல இடங்களில் காவல்துறை கடும் சோதனை மேற்கொண்டது.   பாஜகவினர் இவர்களை நகர்ப்புற நக்சல்வாதிகள் என வர்ணித்து சமூகதளங்களில் பதிவுகளை பரப்பி வருகின்றனர்.    இந்த கைதுக்கு சமூக ஆர்வலர்கள் அருந்ததி ராய், பிரஷாந்த் பூஷன் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து குஜராத் மாநில சட்டப்பேரவை உறுப்பினரும் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி ‘தி பிரிண்ட்” செய்தி தளத்தில், “நகர்ப்புற நக்சல்வாதிகள் என்பது பாஜகவின் பழிவாங்கும் திட்டமாகும்.  இந்த தகவலை ஒரு சில நகர்ப்புற் முட்டாள்கள் பரப்பி வருகின்றனர்.   குஜராத்தில் பாஜக இது  போல நடந்துக் கொள்வதை நான் ஏற்கனவே பல முறை கண்டுள்ளேன்.   அந்த திட்டம் இப்போது அகில இந்திய அளவில் செயல் படுத்தப் படுகிறது.

இன்று மாவோயிஸ்டுகள் என கூறப்படுபவர்கள் பிரதமரை கொல்ல சதி செய்த விவரங்களை பாஜகவினர் வெளியிட்டுள்ளனர்.   எந்த ஒரு மாவோயிஸ்ட் தலைவரோ அல்லது தீவிரவாதியோ இத்தகைய கொலை திட்டத்தை தனது மடிக்கணினியில் பதிந்து வைப்பாரா?  இதே போல ஒரு செய்தி முன்பு மோடி குஜராத் முதல்வராக இருந்த போது பரப்பப்பட்டு இதன் மூலம் மோடிக்கு எதிரானவர்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.    அந்த வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.

எல்கர் பரிஷத் என்னும் இந்த தலித் அமைப்பின் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் அனைத்தும் அரசின் பயத்தை காட்டுகின்றன.    இந்த அமைப்பில் நீதிபதிகள் கோல்சே பாடில் மற்றும் பி பி சாவந்த், ராதிகா வெமுலா மற்றும் பிரகாஷ் அம்பேத்கார் உள்ளனர்.   தலித்துகளான நாங்கள் குஜராத் மாநிலத்தில் 7% இருக்கிறோம்.  ஆனால் தேசிய அளவில் 17% இருக்கிறோம்.  அனைவரும் இணைந்து இதற்கு எதிராக குரல் கொடுப்போம்.” என தனது கட்டுரையில் கூறி உள்ளார்.