ஜீ.வி.பிரகாஷ் திரைப்படத்தில் இணைந்த ஜீவா..!

whatsapp-image-2016-10-04-at-3-11-26-pm

‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் நடித்து ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ள படங்கள் ‘கடவுள் இருக்கான் குமாரு, புரூஸ் லீ’. இதில் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை ‘சிவா மனசுல சக்தி’ எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘டார்லிங்’ நிக்கி கல்ராணி, ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளனர். மேலும், ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ் ராஜ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனராம். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. அசத்தும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், டீசர்ஸ், லோக்கேலிட்டி பாய்ஸ் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தை வருகிற தீபாவளி ரேஸில் களமிறக்க திட்டமிட்டுள்ளது ‘அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனம். அனைத்து எம்.ராஜேஷ் படங்களிலும் ஒரு நடிகர் கெஸ்ட் ரோலில் வருவது வழக்கம். இந்த படத்திலும் கிளைமேக்ஸில் வரும் ‘சிறப்பு தோற்றம்’ உண்டாம். அந்த கெஸ்ட் ரோலில் நடிகர் ஜீவா நடித்துள்ளாராம்.

கார்ட்டூன் கேலரி