லண்டன்: குழந்தைகள், விளையாட்டுத் துறையையே தேர்வு செய்ய வேண்டாமென்றும், அது மிகவும் வலி மிகுந்தது என்றும் சோகத்தில் டிவீட்டியுள்ளார் நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷம்.

2019 கிரிக்கெட் உலகக்கோப்பையை மிகவும் துரதிருஷ்டவசமான முறையில் தவறவிட்ட நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம், தனது உளக்குமுறலை டிவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “நியூசிலாந்து அணியின் ஆதரவாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. நீங்கள் சொன்னதை எங்களால் கேட்க முடிந்தது. ஆனால், உங்களுக்கு பதிலளிக்க எங்களால் முடியவில்லை.

உங்களின் விருப்பத்தை நாங்கள் கேட்டோம். ஆனால், அதை நிறைவேற்ற முடியவில்லை. குழந்தைகளே, தயவுசெய்து விளையாட்டுத் துறையை தேர்வு செய்யாதீர்கள். அது மிகவும் வலி மிகுந்தது.

பேக்கரி தொழில் அல்லது இதர தொழில்துறைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நன்றாக மகிழ்ச்சியாக உண்டு பெருத்து, 60 வயதிலேயே இறக்க நேரிட்டாலும், கவலையில்லாமல் வாழலாம்” என்றுள்ளார்.