ஜியோவின் புத்தாண்டு அதிரடிச் சலுகைகள் மற்ற மொபைல் நிறுவனங்களுக்கு சவாலா?

சென்னை

ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசாக ரூ. 399 ரிசார்ஜ் செய்தால் ரூ. 400 திரும்பப் பெறலாம் என அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்  தனது வாடிக்கையாளர்களைக் கவர பல சலுகைகளை அளித்து வந்துள்ளது.    அதைத் தொடர்ந்து ஏர்டெல் போன்ற மற்ற நிறுவனங்களும் அதற்கு இணையாக சலுகைகளை அறிவித்துள்ளது.    இதனால்  ஜியோவில் புதிய வாடிக்கையாளர்கள் சேர்வது குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜியோ புத்தாண்டை முன்னிட்டு 100% கேஷ் பேக் என்னும் பெயரில் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.   இதன் படி ரூ.399 க்கு ரிசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 400 அவர்களுடைய மை ஜியோ செயலிக்கு திரும்ப அளிக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.  இந்த சலுகை அமேசான் பே, ஃப்ரீ சார்ஜ் போன்ற சேவைகளின் மூலம் ரீசார்ஜ் செய்பவர்களுக்கும் அளிக்கப்படும் என குறிப்பிடப் பட்டுள்ளது.   அது தவிர சில இணைய வர்த்தகர்களிடம் ஜியோ செய்துக் கொண்டுள்ள ஒப்பந்தப்படி ரூ. 2600 மதிப்புள்ள சலுகை கூப்பன்களும் வழங்கப்பட உள்ளன.    இந்த சலுகை டிசம்பர் 26 முதல் ஜனவரி 15 வரை ரீ சார்ஜ் செய்பவர்களுக்கு மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.   வேறு மொபைல் சேவை உபயோகிப்பவர்கள் இதற்கு சவாலாக  மற்ற நிறுவனங்கள் அளிக்கப் போகும் சலுகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளனர்.