jio-fibreமொபைலில் துவங்கி இன்டெர்நெட் வரை அம்பானி குடும்பத்தின் புரட்சிக்கு அளவே இல்லை. தாய் ரிலையன்ஸ் எட்டு அடி பாய்ந்தால், அதன் குட்டி ஜியோ பதினாறு அடி பாய்ந்துள்ளது. 501 ரூபாய்க்கு மொபைல் வழங்கி ரிலையன்ஸ் நிறுவனம் சில வருடங்கள் முன்பு, இந்தியாவில் மொபைல் புரட்சியை உண்டு செய்தது. அதேபோல், இந்த வருடம் கால் கட்டணம் வாழ்க்கை முழுவதும் முற்றிலும் இலவசமாகவும், 4ஜி இன்டெர்நெட் சில மாதங்களுக்கு இலவசம் என ஜியோ நிறுவனம் இன்டர்நெட் புரட்சி செய்தது.

இதுவரை இன்டர்நெட் கொள்ளையில் ஈடுபட்டு வந்த அனைத்து நிறுவனமும், ஜியோ வருகையால் ஆடிப்போனது. இலவசம் என்பதால் 4ஜி மொபைல் வைத்திருக்கும் அனைவரும் ஜியோ நெட்வொர்க்கில் இணைந்தனர். தற்பொழுது ஜியோ நிறுவனம், ஜியோ ஜிகாபைபர் இன்டெர் நெட் சேவையை அறிமுகம் செய்துள்ளது. முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாகும், பின்னர் 500 ரூபாய் முதல் பயன்பாட்டை பொறுத்து கட்டணங்கள் செலுத்தலாம் என அறிவித்துள்ளது.

இனி பிராட்பேன்ட் கனெக்ஷன் அதிவேகமாக வேண்டும் என நினைப்பவர்கள் உடனே ஜியோவிற்கு மாறலாம்.