மும்பை

ன்று நிகழ்ந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி ஜியோவின் பல அதிரடி ஆஃபர்களை அறிவித்தார்.  முக்கியமாக ஜியோ அறிமுகம் செய்யும் ஜியோ ஃபோன் ரூ. 0 (அதாவது முழுவதும் இலவசமாக)க்கு கிடைக்கும் என அறிவித்தார்.

இது பற்றி அவர் கூறியதாவது :

புதியதாக ஜியோ ஃபோன்கள் அறிமுகம் செய்யப்பட போகிறது,  இதன் விலை ரூ. 0 மட்டுமே,  அதாவது இது விலையில்லா ஸ்மார்ட் ஃபோன்.  இதைப் பெற வாடிக்கையாளர்கள் திருப்பி வழங்கக்கூடிய டிபாசிட்டாக ரூ.1500 செலுத்த வேண்டும்.  அவர்களுக்கு இந்த ஃபோன் இலவசமாக அளிக்கப்படும். இந்த ரூ. 1500 மூன்று வருடங்களில் திருப்பித் தரப்படும்.

ஆகஸ்ட் 15 அன்று இந்த ஃபோன் அறிமுகப்படுத்தப்படும்.   ஆனால் இதற்கான புக்கிங்குகள் ஆகஸ்ட் 24 முதல் ஆரம்பிக்கப்படும். செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு ஃபோன் வழங்கப்படும்.

இந்த ஃபோன்கள் 4ஜி உடன் 22 மொழிகளையும் சப்போர்ட் செய்யும்.

2.4 டிஸ்ப்ளே, உடன் கூடிய இந்த ஃபோனில் ஜியோ ஆப்கள் அனைத்தும் ப்ரி லோட் செய்யப்பட்டிருக்கும்.

ஜியோ ஃபோன் டிவி கேபிள் மூலம் இந்த ஃபோனை ஸ்மார்ட் டிவி மட்டுமின்றி ஏனைய டிவிகளிலும் இணைத்துக் கொள்ள முடியும்.  மற்ற ஃபோன்களைப் போல் இதிலும் எஃப் எம் ரேடியோ, டார்ச் போன்றவைகள் உண்டு.

இந்த ஜியோ ஃபோன் மூலம் வாய்ஸ் கால், குறும் செய்திகள், மட்டுமின்றி டேட்டாவும் மாத கட்டணமாக வெறும் ரூ, 153ல் பெறலாம்.  இதில் வங்கிக் கணக்குகள், மற்றும் ஏனைய கார்டுகளை அட்டாச் செய்து ஈசியாக அனைத்துத் தொகைகளையும் ஃபோன் மூலம் செலுத்தலாம்  ரூ 153 பிளான் தவிர ரூ 53 (ஒரு வாரம்), ரூ.23 (இரண்டு நாட்கள்) ஆகிய பிளான்களும் உண்டு.

ஏற்கனவே ஜியோ பல வாடிக்கையாளர்களை 2ஜி, 3 ஜி யிலிருந்து 4 ஜிக்கு மாற வைத்துள்ளது தெரிந்ததே.  இதன் மூலம் உலகிலேயே டேட்டா உபயோகிப்பாளர்கள் உள்ள நாடாக இந்தியாவை மாற்றியுள்ளோம்.

இவ்வாறு கூட்டத்தில் தெரிவித்தார்.