இன்று முதல் விற்பனைக்கு ‘ஜியோ 2’ ஸ்மார்ட்போன்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் “ஜோயோ 2” ஸ்மார்ட் போன் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தில் 41வது ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் கடந்த ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவரும், முகேஷ் அம்பானியின் மகளுமான ஈஷா அம்பானி, தங்கள் நிறுவனம் வெளியிட இருக்கும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தார். ஏற்கனவே ஜியோ நிறுவனம் சார்பில் ரூ.1,500 கட்டணத்தில் சில சலுகைகளுடன் ஒரு போன் வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ஜியோ போன் 2 என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அறிவித்தபடியே ஜியோ போன் 2 இன்று முதல் விற்பனைக்கு வந்தது. நாளை முதல் இது இணையதளத்தில் விற்பனைக்கு வருகிறது. இதில் ஜியோ போனில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே   ஆப்ரேடிங் சிஸ்டமே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த போன் 512 எம்பி ரேம் மற்றும் 4 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டது. இதில் மைக்ரோ சிப் மூலம் கூடுதலாக 128 ஜிபி ஸ்டோரேஜை இணைக்க முடியும். 2.4 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 2 எம்.பி பின்புறம் கேமரா உள்ளது. அத்துடம் 2 எம்.பி விஜிஏ செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இதில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து ஆப்ஸ்களையும் பயன்படுத்த முடியும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

 

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: jio-phone-2-sale-on-today, இன்று முதல் விற்பனைக்கு ‘ஜியோ 2’ ஸ்மார்ட்போன்
-=-