ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ராணுவ வீரர்கள் 4 பேர் வீர மரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

குப்வாரா மாவட்டத்தின் மாச்சில் என்ற பகுதியில் தீவிரவாதிகள் அத்துமீறி நுழைந்துள்ளனர். இதையடுத்து, அந்த பகுதியில் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகள் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்த அதில் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர் உள்பட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இது குறித்து ஸ்ரீநகர் பாதுகாப்புப்படை அதிகாரிகள் கூறியதாவது: நள்ளிரவு 1 மணி அளவில் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் அத்துமீறி நுழைந்ததை  ரோந்துப் பணியில் இருந்த எல்லைப் பாதுகாப்புப்படை வீர்கள் பார்த்துள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதிகளில் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர். எல்லை பகுதிகளில் ராணுவ வீரர்கள் தொடர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினர்.