ஜம்முகாஷ்மீரில் பயங்கரம்: மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 13 பேர் பலி

கிஸ்த்வார்:

ம்மு காஷ்மீர் கிஸ்த்வார் பகுதியில் இன்று காலை பயணிகளை ஏற்றிச்சென்ற மினி பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை பயணிகளை ஏற்றி வந்த மினிபஸ், ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினருடன் அந்த பகுதி மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்குள்ளா மினி பஸ்சை கயிறு கட்டி மேலே இழுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த கோர விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.  பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: J&K Accident:13 Passengers Killed As Mini Bus Falls Into Gorge In Kishtwar, ஜம்முகாஷ்மீரில் பயங்கரம்: மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 13 பேர் பலி
-=-