பணத்துடன் ஏடிஎம் இயந்திரமே திருட்டு! எங்கே?

 

ஸ்ரீநகர்:

ம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணத்தை திருட வந்த திருடர்கள் பணத்தை எடுக்க முடியாததால், ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிக்கொண்டு சென்றுவிட்டனர்.

இந்த பரபரப்பான சம்பவம்  ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா நகரில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள  பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் திருடர்களால் தூக்கி செல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசாரும், வங்கி நிர்வாகத்தினரும்  அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் உள்ள பதிவுகளை கொண்டு விசாரைணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்ளையர்கள் தூக்கிச்சென்ற ஏடிஎம் இயந்திரத்தில் எவ்வளவு பணம் இருந்தது என்பது குறித்த தகவல் தெரியவில்லை. மேலும், இந்த ஏடிம் இயந்திரம் உள்ள அறைக்கு காவலாளி யாரையும் வங்கி நிர்வாகம் நியமிக்க வில்லை என்று கூறப்படுகிறது.

திருடர்களை பிடிக்க  போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

You may have missed