காஷ்மீரில் போர் நிறுத்தம் கொண்டு வர மெஹபூபா முயற்சி…..பாஜக முட்டுக்கட்டை

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் போர் நிறுத்தம் ஏற்பட தந்தை வழியில் முயற்சி மேற்கொள்ளும் மெஹபூபா முப்திக்கு பாஜக முட்டுக்கட்டை போட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மறைந்த காஷ்மீர் முதல்வரும், தற்போதைய முதல்வர் மெஹபூபா முப்தியின் தந்தையுமான முப்தி முகமது சையது மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த முயன்றார். துப்பாக்கி சத்தங்களுக்கு விடை கொடுத்து மாநிலத்தில் நிலவி வரும் போரை நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டார்.

தந்தையில் வழியிலேயே மெஹகபூபாவும் தற்போது இதற்கு முயற்சி செய்து வருகிறார். எதிர்வரும் அமர்நாத் யாத்திரை, ரம்ஜான் நோன்பு போன்ற சூழ்நிலையில் போர் நிறுத்தம் ஏற்பட மெகபூபா திட்டமிட்டு அதற்கு ஏற்ற முறையில் செயல்பட்டு வருகிறார். ஆனால் இதற்கு கூட்டணி கட்சியான பாஜக முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதாக முதல்வர் மீது பாஜக குற்றம்சாட்டுகிறது.

‘‘போர் நிறுத்தம் என்பது பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளிடம் இருந்து வர வேண்டும். அவ்வாறு வந்தார் அவர்களிடம் இருந்து வரும் முதல் முறையீடாக இதை எடுத்துக் கொள்ளலாம்’’ என்று துணை முதல்வர் கவீந்தர் குப்தா தெரிவித்துள்ளார்.