நடிகரும் முன்னாள் திமுக எம்.பி.யுமான ஜே.கே. ரித்திஷ் மாரடைப்பால் இன்று காலமானார்…!

 

நடிகரும் முன்னாள் திமுக எம்.பி.யுமான ஜே.கே. ரித்திஷ் மாரடைப்பால் இன்று காலமானார்.

2009-ம் ஆண்டு நடைபெற்ற 15வது மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று எம்.பி ஆனார். ஆனால் ஒரு சில காரணங்களால் 2014ம் ஆண்டு ஏப்ரல் 10-ல் அதிமுகவில் கட்சி உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.

சமீப நாட்களாக உடல்நலக் குறைவுடன் இருந்து வந்த ரித்திஷ் இன்று ஏப்ரல் 13ம் தேதி ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி படத்தில் ராமராஜ் பாண்டியனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: aiadmk, dmk, JK Rithesh, mp, passed away
-=-