ஜேஎன்யூ மாணவர் முத்துகிருஷ்ணன் உடல் இன்று பிரேத பரிசோதனை!

டில்லி,

மிழகத்தை சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் உடல் இன்று பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.

சேலம் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மேற்படிப்புகாக டில்லியில் உள்ள பிரச்சித்தி பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.

கடந்த 13ந்தேதி தனது நண்பரின் அறைக்கு சென்றிருந்த அவர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.  அங்கிருந்து அவரது உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோத னைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அவரது தற்கொலையில் சந்தேகம் உள்ளது என்று அவருடன் படித்துவரும் மாணவர்களும், அவரது பெற்றோரும் கூறிவருகின்றனர். சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் தமிழக அரசியல் கட்சியினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில்  அவரது உடல் பிரேத பரிசோதனை இன்று நடைபெற இருக்கிறது.

முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று போலீஸ் அதிகாரி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முத்துகிருஷ்ணன் சில நாட்களுக்கு முன்பு தனது பேஸ்புக் சமூக வலைதளத்தில், முனைவர் பட்ட படிப்புகளுக்கான சேர்க்கையில் ஜேஎன்யூவில் பாரபட்சம் காட்டப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக அவருக்கு ஏதேனும் மிரட்டல் வந்திருக்கலாம் என்றும், அதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என்றும் பல்வேறு யூகங்கள் உலாவந்துகொண்டிருக்கறிது.

ஏற்கனவே ஜே.என்.யூ. மாணவர் ரோகித் வெமுலா தற்கொலைக்கு இதுவரை நீதி கிடைக்க வில்லை என்று, ஜேஎன்யூ மாணவர்கள் இணைந்து ஒரு குழு உருவாக்கி, அதன் மூலம் நிர்வாகத்துக்கு அழுத்தம் கொண்டு வந்துள்ளனர்.  அந்த குழுவில் முத்துகிருஷ்ணன் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்து சென்றதாக அவரது நண்பர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று மாணவர்களாலும் பெற்றோர்களாலும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில்  முத்துக்கிருஷ்ணனின் உடல் இன்று பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து அவரது உடல் சேலத்திற்கு  விமானம் மூலம் கொண்டு வரப்படத் திட்டமிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.