தீபிகா எதிர்ப்பில் கொண்டையை மறைக்க தவறிய பிஜேபி !!

டெல்லி :

 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ) முகமூடி அணிந்த குண்டர்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தாக்கிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக  நடிகை  தீபிகா படுகோனே செவ்வாய்க்கிழமை மாலை ஜே.என்.யூ பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்தார்.

 

இந்த நிகழ்ச்சிக்கு பாராட்டு தெரிவித்து பலரும் சமூக வலைத்தளங்களில் #ISupportDeepikaPadukone என்று ஆதரவு தெரிவித்து வரும் வேலையில். அவருக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட சிலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 

எதிர்ப்பு தெரிவிப்பதற்காக தீபிகா நடிப்பில் உருவான ‘ச்சாபாக்’ படத்தை புறக்கணிக்க போவதாகவும், இந்த படத்திற்காக தாங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்வதாகவும் சிலர் ட்வீட் செய்திருந்தனர்.

 

 

அப்படி ட்வீட் செய்தவர்கள் கொண்டையை மறைக்க தவறியவர்களாய்  அனைவரும், ஒரே தியேட்டர், ஒரே காட்சி, ஒரே சீட் நம்பரை ரத்து செய்திருப்பதாக ட்வீட் செய்திருப்பது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

அது மட்டுமல்ல அப்படி ட்வீட் செய்தவர்களின் கணக்குகள் பா.ஜ.க. ஆதரவாளர்கள் என்பதும்,  அப்படியானால் தாக்குதல் நடத்திய குண்டர்களுக்கு ஆதரவு தருபவர்கள் யார் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.