நடிகர் ரன்பீர் கபூர் போல் இருந்த பிரபல மாடல், ஜூனைத் ஷா மாரடைப்பு காரணமாக ஶ்ரீநகரில் உள்ள வீட்டில் திடீரென இன்று காலமானார்.
இதை காஷ்மீரைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் யூசுப் ஜமீல் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காஷ்மீரைச் சேர்ந்தவரான இவர், மும்பையில் தங்கி மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார். அத்துடன் அனுபம் கெரின் நடிப்புப் பள்ளியில் சேர்ந்தும் படித்துள்ளார். ரன்பீர் கபூரின் சாயலை அப்படியே கொண்டிருந்த அவரது புகைப்படத்தைக் கண்டு, மறைந்த நடிகர் ரிஷி கபூரே ஆச்சரியப்பட்டார்.
லாக்டவுனில் தொடர்ச்சியாக ஏற்படும் திரைப்பிரபலங்களின் மறைவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.