Random image

ஜவகர்லால் நேரு பல்கலை மாணவர் சங்கம் : நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

டில்லி

வகர்லால் நேரு பல்கலைக்கழக தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது.  இந்த தேர்தல் நேரத்தில் ஆர் எஸ் எஸ் மாணவர் அணியான ஏபிவிபி ம்ற்றும் இடது சாரி அணிகளுக்கிடையில்  பெரிய தகராறுகளும் அதை ஒட்டி கடும் வன்முறையும் வெடித்தன.   தேர்தலில் பல இடங்களில்  இடது சாரி அணி வெற்றி பெற்றது.   இதனால் ஆர் எஸ் எஸ் அமைப்பு மிகவும் அதிருப்தி அடைந்துள்ளது.

இந்த முடிவுகள் குறித்து இந்த பல்கலைக்கழக முன்னாள் மாணவியான பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.  அவர் இந்திய பெண்கள் பத்திரிகையாளர் சங்க கூட்டத்தில், “தற்போது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது.  நாட்டுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட அணி வெற்றி பெறுவது நாட்டுக்கு நல்லது அல்ல.

நான் ஆண்டி இந்தியா என சொன்னால் அது நிச்சயமாக ஆண்டி இந்தியா தான்.   அவர்களுடைய பல பத்திரிகை செய்திகளும் அதை உறுதி செய்கின்றன.   இந்தியாவுக்கு எதிரான கருத்துக்கள் கொண்டவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.  அவர்கள் நிச்சயமாக இந்தியாவுடன் போர் தொடுக்க தயாராக உள்ளனர்.   அதை என்னால் இப்போதே காண முடிகிறது” என தெரிவித்தார்.

இது குறித்து ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.   சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “பல்கலைக்கழக முன்னாள் மாணவி மற்றும் ஒரு மூத்த அமைச்சராக உள்ளவரின் இத்தகைய கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.   அதுவும் ஆண்டி இந்தியர் எனவும் இந்தியாவுடன் போர் தொடுப்போம் என்பதும் நிச்சயமாக தவறான கருத்து என்பதில் ஐயமில்லை.

இந்த பல்கலைக்க்ழகத்தில் இருந்து பல மாணவர்கள் நல்ல நிலையில் உள்ளனர்.  மதிப்பான அவர்களை தாக்குவது போல் அமைச்சர் கருத்துக் கூறி உள்ளார்.   இந்த சங்கம் எப்போதும் நடுநிலையுடன் எல்லா விவகாரங்களையும் கையாள்வது அமைச்சருக்கு அவ்வாறு எண்ணத் தூண்டி இருக்கலாம்.   யார் ஆண்டி இந்தியர் என்பதை காலம் சொல்லும்” என கூறப்பட்டுள்ளது.