டில்லி நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர் தற்கொலை! பரபரப்பு

டெல்லி:

லைநகர் டில்லியில் உள்ள பிரபலமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த தமிழக மாணவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலை செய்த மாணவர், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரிஷி ஜோசுவா என்பதும், அங்கு  எம்.ஏ. ஆங்கிலம் இறுதி ஆண்டு பயின்று வந்தாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில்  முதுகலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்த கடந்த சில நாட்ளாக மனஅழுத்தம் காரணமாக தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் அங்குள்ள   மஹி மாண்ட்வி ஆண்கள் விடுதியில் இவர் தங்கியிருந்தார்

இந்த நிலையில், ரஷி தனது ஆங்கிலப் பேராசிரியர் ஒருவருக்கு மின்னஞ்சல் மூலம், தான் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதை பார்த்த அந்த பேராசிரியர் இது பற்றி உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து ரிஷியை காவலர்களும், சக மாணவர்களும் தேடினர். அப்போது,  ஜேஎன்யு வளாகத்திலுள்ள நூலகத்தின் அறையொன்று பூட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதை உடைத்து பார்த்தபோது, அங்கு தூக்கிலிட்ட நிலையில் ரிஷி  சடலம் கைப்பற்றப்பட்டது.

இதுகுறித்து காவல்துறையினர் விசரணை நடத்தி வருகின்றனர். . மாணவரின் சடலம் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.