100 நாட்களுக்கு முகக்கவசம் அணிய உறுதியேற்க சொல்லும் ஜோ பைடன்!

வாஷிங்டன்: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, அமெரிக்கர்கள் மொத்தம் 100 நாட்கள் முகக்கவசம் அணிவதற்கு உறுதியேற்று கொள்ள வேண்டுமென்றுள்ளார் அந்நாட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன்.

அதிபர் என்ற முறையில், இது அவரின் முதல் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இந்தவகையில், இவர் தற்போதைய அதிபர் டொனால்ட் டரம்ப்பிடமிருந்து பெரிதும் வேறுபடுகிறார்.

ஏனெனில், கொரோனா முகக்கவசம் அணிவதை, நோய் தொற்றுப் பிரச்சினையை அரசியலாக்கு நடவடிக்கை என்று டிரம்ப் விமர்சனம் செய்து வருகிறார். இதனால், அவர் முகக் கவசம் அணிவதில்லை.

டிரம்ப்பின் இந்தப் போக்கால், முகக் கவசம் அணிவதை பல அமெரிக்கர்கள் தவிர்த்து வருகின்றனர். கொரோனா தொற்றை தடுப்பதில், முகக் கவசம் அணிவது ஒரு எளிமையான வழிமுறை என்று சுகாதார நிபுணர்கள் கூறியிருந்தும் இந்த நிலை. அமெரிக்கர்களில் சுமார் 2,75,000 பேர், இதுவரை கொரோனாவால் இறந்துள்ளனர்.

அதேசமயம், முகக் கவசம் அணிவதை எப்போதும் வலியுறுத்தி வருபவராக இருக்கிறார் புதிய அதிபர் ஜோ பைடன்.