மும்பை: தேர்தல்களையொட்டி, வடஇந்தியாவில் வழக்கமாக நடைபெறும் தேர்தல் சூதாட்டத்தில், தற்போதைய நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தேர்தல் வெற்றிக்கு, அதிகளவு பெட்டிங் மதிப்பு தரப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக, கடந்தமுறையைவிட, இந்தமுறை இந்திய தேர்தல் சூதாட்ட சந்தையில் பரபரப்பு கூடியுள்ளது. வட இந்தியாவின் தேர்தல் சூதாட்ட சந்தை ‘சட்டா மார்க்கெட்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவில், டொனால்ட் டிரம்ப்பிற்கு இருக்கும் பிரபலம் காரணமாக, இந்தாண்டு அதிபர் தேர்தல் தொடர்பாக, இந்திய சட்டா மார்க்கெட்டில் பரபரப்பு கூடியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, டிரம்ப் வெல்வார் என்று ஒருவர் ரூ.1 லட்சம் பந்தயம் கட்டினால், அவரின் கணிப்பு பலிக்கும்போது, அவருக்கு ரூ.2 லட்சம் திருப்பி அளிக்கப்படும். ஆனால், ஜோ பைடன் வெல்வார் என்று கணிக்கும் ஒருவர் ரூ.1 லட்சம் பந்தயம் கட்டினால், அவரின் கணிப்பு பலிக்கையில், அவருக்கு ரூ.1.40 லட்சம் மட்டுமே திருப்பியளிக்கப்படும்.
அதாவது, ஜோ பைடனுக்கான வெற்றி மதிப்பு வெறும் 40 பைசா மட்டுமே. அதேசமயம், ஜோ பைடனுக்கான வெற்றி மதிப்பு ரூ.1. அதேசமயத்தில், தேர்தல் நெருக்கத்தில் இந்த வெற்றி மதிப்பு மாறும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவுக்கு அதிகளவில் நபர்களை அனுப்பியுள்ள குஜராத், பஞ்சாப் மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களிலிருந்து இந்த பெட்டிங் அதிகளவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
தற்போதைய பெட்டிங் நிலவரத்தைப் பார்க்கையில், ஜோ பைடன் வெல்வதற்கான வாய்ப்பே அதிகம் இருப்பதால், அவரின் வெற்றிகுறித்த பந்தய மதிப்பு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ‘சட்டா மார்க்கெட்’ வாக்குகளை ஜோ பைடனே பெற்றுள்ளார் என்பது தெளிவாகிறது.