அடுத்த தேர்தலில் தி.நகர் தொகுதியில் போட்டியிடுகிறாரா ஜோதிகா……?

கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் OTT தளத்தில் வெளியாகும் முதல்படமாக ‘பொன்மகள் வந்தாள்’ அமைந்துள்ளது. அதன்படி வரும் 29-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் படம் வெளியாக உள்ளது.

படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டிருக்கும் நிலையில் நடிகை ஜோதிகா ஜூம் ஆப் மூலமாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது படம் குறித்த பல கேள்விகளுக்கு பதிலளித்த ஜோதிகவிடம், நீங்கள் ஏன் அரசியலுக்கு வந்து அடுத்த தேர்தலில் தி.நகர் தொகுதியில் போட்டியிடலாமே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஜோதிகா, அரசியலுக்கு வராமலேயே நல்லது பண்ணலாம். உண்மையில் அப்படித் தான் அதிகமாக மக்களுக்கு நல்லது செய்ய முடியும். கண்டிப்பாக தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன். ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூக பொறுப்பு இருக்க வேண்டும். அனைத்துக்கும் அரசையே நம்பி இருக்கக் கூடாது. ஊர் சுத்தமாக இருக்க வேண்டுமெனில் முதலில் வீடு சுத்தமாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.