அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக தமிழ் வம்சாவளிப் பெண் கமலா ஹாரிஸை அறிவித்த ஜோ பிடன்

வாஷிங்டன்

தாம் அமெரிக்க அதிபரானால் இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் துணை அதிபர் ஆவார் என ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் களத்தில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில் உள்ளனர்.   அதிபர் தேர்தல் தொடக்கத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் போட்டியில் கமலா ஹாரிஸ் இடம் பெற்றிருந்தார்.

இந்திய வம்சாவளியினரான கமலா சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட தமிழ்  பெண்மணி ஆவார்.

ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன், கமலா ஹாரிஸ், பெர்னி சாண்டர்ஸ் ஆகிய மூவரும் அதிபர் வேட்பாளராக போட்டியில் இருந்தனர். இதில் நிதிச் சிக்கல் காரணமாகக் கமலா ஹாரிஸ் போட்டியில் இருந்து விலகினார்.  தற்போது ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் களத்தில் உள்ளார்.

ஜோ பிடன் தனது டிவிட்டரில் தாம் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் கமலா ஹாரிஸ் துணை அதிபர் ஆக நியமிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த தகவல் அமெரிக்காவில் கடும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது,   அமெரிக்கத் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டால்  கறுப்பர் ஆன ஒரு இந்தியப் பெண் முதல் முறையாக பதவி ஏற்பார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கார்ட்டூன் கேலரி