வாஷிங்டன்: எச்-1பி உள்ளிட்ட உயர் தொழில்திறன் கொண்ட வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான விசாக்களுக்கான எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு, புதிதாக தேர்வுசெய்யப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முடிவின் மூலம், டிரம்ப் நிர்வாகத்தில் கொண்டுவரப்பட்ட விசா கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் இந்திய உயர்தொழில்நுட்ப பணியாளர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

டிரம்ப் நிர்வாகம் விதித்திருந்த கட்டுப்பாடுகளால், எச்-1பி விசா பெற்றிருந்தவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்றுள்ள நிலையில், இந்த மிக முக்கிய முடிவை ஜோ பைடன் மேற்கொள்ளவுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது, பைடன் நிர்வாகம் திட்டமிட்டுள்ள குடியேற்ற சீர்திருத்தத்தில் ஒரு பகுதியே என்று கூறப்பட்டுள்ளது.