அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் பகலிரவு டெஸ்ட்டில், இங்கிலாந்தின் நிலை மோசமாகியுள்ளது. அந்த அணி 56 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

தற்போதைய நிலையில், இந்தியாவைவிட 23 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றுள்ளது.

துவக்கத்திலேயே கிராலே மற்றும் பேர்ஸ்டோ விக்கெட்டுகளை அக்ஸாரிடம் பறிகொடுத்த இங்கிலாந்து, சற்றுநேரம் இடைவெளிவிட்டு டாம் சிப்லியின் விக்கெட்டை இழந்தது.

பின்னர், கேப்டன் ரூட்டும், பென் ஸ்டோக்ஸும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினர். இதனால், அந்த அணி ஓரளவு கெளரவமான ஸ்கோரை எட்டலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஸ்டோக்ஸ் அவுட்டானார். அதற்கடுத்த சிறிதுநேரத்தில் 19 ரன்கள் எடுத்திருந்த ரூட்டை, அக்ஸார் படேல் திருப்பி அனுப்பினார்.

தற்போது ஓலி போப் மற்றும் பென் ஃபோக்ஸ் ஆடிவருகின்றனர். இதனால், அந்த அணி கடும் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவைவிட 100 ரன்களுக்கு மேல் முன்னிலைப் பெற்றால்தான் ஃபைட் கொடுக்க முடியும் என்ற நிலையில், இங்கிலாந்து அதை செய்யுமா?