தமிழில் ரீமேக் ஆகிறது இயக்குனர் தேஜா மார்னியின் ‘ஜோஹார்’…..!

தெலுங்கில் முன்னணித் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று கீதா ஆர்ட்ஸ். தற்போது ‘ஆஹா’ என்ற பெயரில் தெலுங்கு மொழிப் படங்களுக்கு மட்டும் தனியாக ஓடிடி தளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

சுதந்திர தினத்தன்று ‘ஆஹா’ ஓடிடியில் வெளியான படம் ‘ஜோஹார்’. இந்தப் படத்தின் போஸ்டர்கள், ட்ரெய்லர்கள் என அனைத்துக்குமே இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்யவுள்ளார்கள். தெலுங்குப் படத்தை இயக்கிய தேஜா மார்னி, தமிழிலும் இயக்கவுள்ளார். அங்கித் கோய்யா, நைனா கங்கூலி, எஸ்தர் அனில் உள்ளிட்ட பலர் தெலுங்கில் நடித்திருந்தனர்.