‘ மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும் மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவியது. இதன் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளரான பைவ் ஸ்டார் கதிரேசன் கைப்பற்றியுள்ளார்.
தற்போது இதன் இந்தி ரீமேக் உரிமையை, பிரபல நடிகர் ஜான் ஆபிரஹாம் கைப்பற்றியுள்ளார். இதனை தனது ட்விட்டர் பதிவில் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். தனது ஜே.ஏ என்டர்டையின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.