அதிர்ச்சி : குழந்தைகள் பவுடரில் அபாயகரமான கலப்படமா? 

ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் பவுடரில் கலப்படம் உள்ளதாகக் கூறி  இமாச்சலபிரதேசத்திலுள்ள நூற்பத்தி நிறுவனத்தில் மாதிரிகளை ஆய்வுக்காக மருந்து ஆய்வாளர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனம் குழந்தைகளுக்கான  பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. அதில் ஒரு நிறுவனம் இமாச்சலபிரதேசம் பட்டி என்ற இடத்தில் இயங்கி வருகிறது. அங்கு சென்ற மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனையிட்டு, அங்கிருந்து சில மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் கலக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தால் அவர்கள் மாதிரிகளை எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது. இதுகுறித்து கூறிய ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனம்,’’இது ஒருதரப்பான செய்தி’’ என்று கூறியுள்ளது.  அமெரிக்காவில் இயங்கும் ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் அலுவலகம்,’’ ஜான்ஸன் பேபி பவுடர் பாதுகாப்பானது. அதில் ஆஸ்பெஸ்டாஸ் இல்லை’’ என மறுப்புத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை  அதிகாரி ஒருவர் கூறுகையில்,’’ இந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாக  உள்ளது’’ எனக் கூறியுள்ளார்.

ஆஸ்பெஸ்டாஸ் புற்றுநோயை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.