ஜான்சன் & ஜான்சன் : பழுதடைந்த இடுப்பு மூட்டுக்கு ரூ. 1.22 கோடி இழப்பீடு

--

டில்லி

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் புழுதடைந்த இடுப்பு மூட்டு அளித்ததற்காக ரூ. 30 லட்சத்தில் இருந்து ரூ.1.22 கோடி வரை இழப்பீடு வழங்க உள்ளது.

வயது மற்றும் விபத்து காரணமாக இடுப்பு செயல்பாடு இழந்தவர்களுக்கு மாற்று இடுப்பு மூட்டு அறுவை சிகிச்சை நடத்தப்படுகிறது. இவ்வாறு மாற்று இடுப்பு மூட்டுக்கள் தயாரிக்கும் நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் என்னும்வெளிநாட்டு நிறுவனம் அளித்தவைகளில் பல பழுதடைந்துள்ளன . இது குறித்து உலகெங்கும் புகார்கள் எழுந்தன.

இந்தியாவில் கடந்த 2004 முதல் 2010 வரை இத்தகைய 4700 அறுவை சிகிச்சைகள் இதுவரை நடைபெற்றுள்ளன. இதில் சுமார் 1000 பேர் குறித்து மட்டுமே விவர்ங்கள் கிடைத்துள்ளன. அதிலும் சுமார் 100 பேர் மட்டுமே புகார் அளித்துள்ளனர். இவர்களுக்கான இழப்பீடு தொகை குறித்து முடிவு செய்ய அரசு ஒரு மருத்துவர் குழுவை அமைத்தது.

அந்த மருத்துவர் குழு தனது நீண்ட ஆய்வுக்குப் பிறகு தனது அறிக்கையை அளித்துள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் இழப்பீடு குறித்து அரசின் குழு கணக்கீடு செய்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு வழங்கி உள்ளது. அதன்படி பாதிக்கப்பட்டவரின் வயது மற்றும் பாதிப்பின் அளவைப் பொறுத்து ரூ. 30 லட்சத்தில் இருந்து ரூ.1.22 கோடி வரை இழப்பீடு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதாவது சுமார் 50 வயதான ஒரு நோயாளிக்கு 50% வரை பாதிப்பு இருந்தால் அவ்ருக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு கிடைக்கும்.

இது குறித்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன அதிகர் ராஜிவ் நாத், “நோயாளிகளின் நலனுக்காக அரசு இழப்பீடு குறித்து அறிவித்துள்ளதற்கு மகிழ்ச்சி அடைகிறோம். இழப்பு என்பது ஈடு செய்யக்கூடியதல்ல என்பதை நாங்களும் அறிகிறோம். ஆயினும் நோயாளிகளுக்கு உதவும் வகையில் ஓரளவு நிதி கிடைக்கும் என்பதால் பாதிக்கப்பட்டோர் அரசு அளித்த கணக்கீட்டின் படி இழப்பீடு பெற்றுக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.