அமெரிக்க படையினர் விழிப்புடன் இருக்குமாறு ராணுவ தலைமை அதிகாரி அறிவுறுத்தல்

 

அமெரிக்காவில் கடந்த 6-ம் தேதி நடந்த வன்முறையில் இரண்டு போலீசார் உட்பட 6 பேர் இறந்து போனதற்கு ராணுவ கூட்டு படையின் தலைமை அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ராணுவ தலைமை அதிகாரி மார்க் மில்லே உள்ளிட்ட ராணுவ தலைமை அலுவலர்கள் கையெழுத்திட்ட இந்த கடிதத்தை அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது, அதில் :

நாடாளுமன்றத்தின் அரங்கேறிய நிகழ்வுகள் நமது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பதில் சந்தேகமில்லை.

மார்க் மில்லே

அமெரிக்காவின் இறையாண்மைக்கு கேடு விளைவிக்கும் எந்த ஒரு நிகழ்வையும் ராணுவம் பொறுத்துக்கொள்ளாது.

ஜனவரி 20-ம் தேதி புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்க உள்ள நேரத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழாத வகையில் ராணுவத்தினர் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.