பசிபிக் கடலில் அமெரிக்காவுடன் இணைந்து சீனா கூட்டு பயிற்சி

பெய்ஜிங்:

பசிபிக் கடலில் சர்வதேச கூட்டுக் பயிற்சியில் பங்கேற்பது குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது.

‘ஆஐஎம்பிஏசி’ என்று அழைக்கப்படும் சர்வசேத கூட்டுக் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க வழக்கம் போல் இந்த ஆண்டும் தங்களுக்கு அழைப்பு வந்துள்ளது என்று சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனா உரிமை கொண்டாடி வரும் தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்கா அத்துமீறி வருவதாக அந்த நாடு குற்றம் சாட்டி வந்தாலும் இந்த கூட்டுபயிற்சியில் அமெரிக்காவுடன் இணைந்து சீனாவும் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: joint training between China and america in Pacific Sea, பசிபிக் கடலில் அமெரிக்காவுடன் இணைந்து சீனா கூட்டு பயிற்சி
-=-