‘ஜிப்ஸி’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடாஷா சிங்: பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

ராஜூ முருகனின் ‘ஜிப்ஸி’ படத்தில், கதாநாயகனான  ஜீவாவுக்கு ஜோடியாக, மிஸ் இந்தியா பங்கேற்பாளர் நடாஷா சிங் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய் இயக்குனர் ராஜூமுருகன், தற்போது ஜீவாவை வைத்து ஜிப்ஸி என்ற படம் தயாரித்து வருகிறார். இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக பிரபல விளம்பர நடிகையும், மிஸ் இந்தியா போட்டியின் இறுதிப் போட்டியாளரான நடாஷா சிங் நடிக்கிறார்.

ஜிப்ஸி என்பது பயணம் பற்றிய கதை. இந்த படத்தில் ஜீவா  நாடு முழுவதும் பயணம் செய்யும் ஒரு இளைஞனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக ஜீவா சார் நீளமான முடி வளர்த்துள்ளார். மேலும் கிட்டார் வாசிக்கவும்ட கற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. படம் முழுக்க அவருடன் குதிரையும் இணைந்து நடிக்கிறது.

ஜிப்ஸி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மீண்டும் இயக்குநர் ராஜூமுருகனுடன் ஜிப்ஸி படத்தில் இணைந்திருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 'ஜிப்ஸி' படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடாஷா சிங்: பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு, joker director rajumuragans 'zypsy' Jeeva movie firstlook poster released
-=-