கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.

நிலைமை சரியாகிவிட்டது என நினைக்கும் தருவாயில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் மீண்டும் தொடங்கி விட்டது. போன முறையை விட இந்த முறை அதி வேகமாக பரவி வருகிறது கொரோனா.

பலரும் கொரோனாவின் 2-வது அலையில் சிக்கித் தவிக்கும் நிலையில் திரைத்துறை நட்சத்திரங்களும் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட துளசி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று (மே 09) நடிகர் ஜோக்கர் துளசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1976ஆம் ஆண்டு வெளியான ‘உங்களில் ஒருத்தி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 45 ஆண்டுகளாக பல்வேறு திரைப்படங்கள், தொலைகாட்சி தொடர்கள் ஆகியவற்றில் நடித்துள்ளார் துளசி. ‘கோலங்கள்’, ‘வாணி ராணி’, ‘கஸ்தூரி’, ‘அழகு’ ஆகிய சீரியல்களில் இவர் நடித்த கதாபாத்திரங்கள் பிரபலமானவை. இறுதியாக ‘தந்துவிட்டேன் என்னை’ என்ற வெப் சீரியலில் நாயுடு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

https://m.facebook.com/story.php?story_fbid=316098989877042&id=100044308302160